கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 30 ஆயிரம் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 December 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 30 ஆயிரம் தாண்டியது

 


இலங்கையில் மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.


தற்சமயம், 30072 பேர் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையாக இருக்கின்ற அதேவேளை இதில் 21800 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பின்னணியில் தற்சமயம் 8128 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 144 பேர் உயிரிழந்துள்ளமையும் அதில் பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment