ஐக்கிய தேசியக் கட்சி அரசியலில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கட்சித் தலைமையகம் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.
இந்நிலையில், சிறிகொத்தா ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்க தனது சொந்த நிதியிலிருந்து 30 லட்ச ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளார் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததன் பின்னணியில் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, மாற்றுத் தலைமையொன்றைக் கண்டு பிடிக்கவும் முடியாத சூழ்நிலையில் இருப்பதோடு தமது கட்சியின் தேசியப்பட்டியல் நியமனத்தையும் தீர்மானிக்க முடியாது தவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment