பொலிதீன் பக்கற்றுகளுக்கான தடையை ஆறு மாத காலம் பின் போடுவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு 2.5 கோடி ரூபா லஞ்சம் கொடுக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷம்பு, ஜெல் மற்றும் தலையில் பூசும் 'டை' போன்றவற்றை நாட்டில் விநியோகிக்கும் முக்கிய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மஹிந்த அமரவீர அதனை மறுத்துள்ளதாகவும் குறித்த வர்த்தகர் தற்சமயம் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment