சிறையில் உள்ள சன நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்போரை விடுவிப்பதோடு மரண தண்டனையை 20 வருட சிறைத்தண்டனையாகக் குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து பாரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி துமிந்த சில்வா விடுவிக்கப்படக்கூடும் என்றும் அரசியல் மட்டத்தில் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment