இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் மூவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தெல்தெனிய, தர்கா நகர் மற்றும் களுத்துறையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் சில ஜனாஸாக்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக அறியமுடிகிறது.
தற்சமயம், தொடர்ந்தும் 8163 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment