கடந்த மார்ச் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் நாட்டில் பெருந்தொற்று அவதானம், போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வாகன விபத்துகளில் சிக்கி 1900 பேர் மரணித்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பல இடங்களில் ஊரடங்கு அமுலில் இருந்தும் இவ்வாறு நிகழ்ந்துள்ளதுடன் தற்சமயம் நிலவும் சூழ்நிலையில் மேலும் அவதானம் தேவைப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக வாகன விபத்துகள் அதிகரித்துள்ள அதேவேளை இலங்கையில் சராசரியான 3000 பேர் வருடாந்தம் வாகன விபத்துகளால் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment