இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பிலியந்தலயைச் சேர்ந்த ஒருவரது மரணம் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
72 வயதான குறித்த நபரின் மரணம் கொரோனா பாதிப்பின் ஊடாக ஏற்பட்டதாக இன்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் 6990 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment