ஒக்டோபர் 4ம் திகதி முதல் அறியப்படும் இரண்டாவது கொரோனா அலையில் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 12,604 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் கொழும்பிலிருந்து 526 தொற்றாளர்கள் இணைந்துள்ள அதேவேளை அதில் 175 பேர் வெலிகடையிலிருந்து எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29,378 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment