ஜனாஸா எரிப்பு: UK முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதிக்கு கடிதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 20 November 2020

ஜனாஸா எரிப்பு: UK முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

 


இலங்கையில் அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமது கவலையையும் மீள்பரிசீலனையையும் கோரி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 'முஸ்லிம்' சமூக அமைப்புகள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.


ஐக்கிய இராச்சியத்தில் சமூக நோக்கோடு இயங்கி வரும் 'முக்கிய' அமைப்புகள் கூட்டாக இணைந்து அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில் உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் நடைமுறை, சமய உரிமைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலைத் தழுவி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையை செவிமடுத்து ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த கடிதம், லண்டன் தூதரகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சமூக அக்கறை கொண்ட கீழ்க்காணும் 'முஸ்லிம்' அமைப்புகள் இதில் கையொப்பமிட்டுள்ளன: 

  • Association of Sri Lankan Muslims – Reading (ASLAM)
  • Al Furqan Islamic Da'wah Association, UK
  • British Sri Lankan Muslim Community Watford
  • Islah Trust, UK
  • Sri Lankan Muslim Diaspora Initiative UK (SLMDI UK)
  • Sri Lankan Muslim Foundation Crawley (SLMFC)
  • Sri Lankan Muslim Foundation – Leicester
  • Sri Lankan Muslim Walfare Association Crawley (SLMWAC)
  • Sri Lankan Moors Society – UK
  • Tees Lanka Islamic Society – Middlesbrough
  • UK Madawala Welfare Society (UKMBWS)

No comments:

Post a Comment