வடபுலத்திலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் முஸ்லிம் சமூகம் அடாவடியாக வெளியேற்றப்பட்டு 30 வருடங்களை நினைவு மீட்டும் முகமாக சர்வதேச யாழ் முஸ்லிம் சமூக அமைப்பின் (Jaffna Muslim Community International) ஏற்பாட்டில் ஐக்கிய இராச்சியம், லெஸ்டர் நகரில் நேற்றைய தினம் ஒன்று கூடல் இடம்பெற்றது.
இது குறித்து சோனகர்.கொம்முக்கு கருத்து வெளியிட்ட அமைப்பினர், மூன்று தசாப்தங்களாகியும் திருப்திகரமான முறையில் மீள் குடியேற்றம் இடம்பெறாததால், இது குறித்து உடனடி கவனம் செலுத்துவதுடன் ஐ.நா உட்பட முக்கிய இடங்களைத் தொடர்பு கொண்டு நீதி கேட்பதற்கும் இந்நிகழ்வின் போது தீர்மானிக்கப்பட்டதாக விளக்கமளித்தனர்.
லெஸ்டர், அல்புர்கான் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்களான நசீர், முசம்மில், முர்சி, அஜ்மயீன் மற்றும் அர்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment