தாயாரின் அரவணைப்பில் தங்கி மாத்திரம் வாழ்ந்த 25 வயது விசேட தேவையுள்ள குழந்தையொன்று தாய் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஹோமாகமயில் இடம்பெற்றுள்ளது.
மஹரகம மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் பின்னணியில் கொரோனா தனிமைப்படுத்தலுக்காக தாயார் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, அங்கு விசேட தேவையுள்ள அவரது மகன் இருப்பதாக எடுத்துக் கூறப்பட்டும் சுகாதார ஆய்வாளர் அதற்கான மாற்றீடெதுவும் செய்யாத நிலையில் தனிமையில் விடப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தாயை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி விட்டு, காலியில் வசிக்கும் உறவுக்காரர் ஒருவருக்கு தொலைபேசியில் அறிவித்ததாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த நபரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்குக் காரணம் எனவும் தாயாரை அனுப்பும் போது அவருக்குத் தாம் இது பற்றி எடுத்துக் கூறியும் தகுந்த நடவடிக்கை எடுக்காது இவ்வாறு நடந்து கொண்டதாக அயலவர்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிமையில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, இறந்தவருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment