முல்லேரியா வைத்தியசாலையில் பழுதடைந்திருந்ததாகக் கூறப்பட்ட பி.சி.ஆர் இயந்திரத்தை சீன நிபுணர்கள் வருகை தந்து திருத்தியிருந்த நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு புதிய இயந்திரம் ஒன்றையும் சீனா வழங்கவுள்ளது.
முன்னைய இயந்திரம் பழுதடைந்திருக்கவில்லையெனவும் அது வைக்கப்பட்டிருந்த மேசை நேராக இருக்காத காரணத்தினாலேயே தவறு நிகழ்ந்திருந்ததாகவும் நிபுணர்கள் விளக்கமளித்திருந்தனர்.
எனினும், எதிர்காலத்தில் இயந்திரம் பழுதடைந்தால் உடனடி மாற்றுப் பாவனைக்காக இவ்வாறு மேலதிக இயந்திரம் வழங்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment