இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய எரிப்புக்குட்படுத்தப்படுவது தொடர்கின்ற நிலையில் இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பு இது குறித்து தமது மனித உரிமைகள் பிரிவின் ஊடாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் பிரகாரம் அனைத்து நாடுகளிலும் கொரோனாவால் உயிரிழப்போருக்கான இறுதிச் சடங்குகளின் போது அவர்களது சமய உரிமைகள் மதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
எனினும், இலங்கையின் நீதியமைச்சராக இருக்கும் முஸ்லிம் நபர், இதற்கு முன்னர் கொரோனாவால் உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பதற்கு எடுத்த முடிவானது, எவ்வித அரசியல் தலையீடுமின்றி விஞ்ஞான ரீதியான காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என நாடாளுமன்றிலும் வெளியிலும் விளக்கமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment