கொரோனா பாதிப்பினால் ஐ.டி.எச்சில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணொருவர் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார் அவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இரண்டு வயது கைக்குழந்தையுடன் தப்பிச் சென்ற குறித்த பெண், குழந்தையை உறவினர் ஒருவரின் வீட்டில் ஒப்படைத்து விட்டுத் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குழந்தையை மீட்டு மீளவும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தாயைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கின்ற பொலிசார் குறித்த பெண் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment