முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு கம்பஸ் என அறியப்படும் தனியார் கல்வி நிறுவனம் இயங்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
இலங்கையில் 'பட்டப்படிப்பினை' வழங்குமளவுக்கு அந்த நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லையெனவும் அங்கு ஷரீயா பாடத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை அங்கீகரிக்கப்படவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கல்வி நிறுவனத்தை அரசுடமையாக்கி அதனை ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் அரசு செயற்படுத்தும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment