கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதியளித்து விட்டதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு சி.டி.ஜே என்ற அமைப்பு வெளியிட்டிருந்த கடிதம் தொடர்பில் விசாரிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த.
இது தொடர்பில் தாம் ஜனாதிபதியிடம் வினவிய போது, அவ்வாறு எதுவித அனுமதியும் தான் வழங்கவில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு அதனை விசாரிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
குறித்த தினம், அவசர அவசரமாக இவ்வமைப்பு சிங்களத்தில் வெளியிட்டிருந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு கடும்போக்குவாதிகள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருவதுடன் ஞானசாரவும் நீண்ட ஓய்விலிருந்து திரும்பி இதைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தமையும் இவ்வாறான கடிதங்களால் அரசுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக பிரேம்நாத் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment