முஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான் முஸ்லிமாகவே இருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்சவின் முசம்மில்.
அனைத்து மதங்களைச் சேர்ந்த நண்பர்களும் தமக்கிருப்பதாகவும் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்ட அளவில் அனைத்து வகையான மனிதர்களுடனும் பழகியிருக்கின்ற போதிலும் சஹ்ரான், ஹக்கீம் , பதியுதீன் வகையறாக்களைச் சேர்ந்த முஸ்லிமில்லாத போதிலும் தான் நல்லதொரு முஸ்லிம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்சமயம் பேசு பொருளாகவுள்ள ஜனாஸா எரிப்பு விடயத்தைத் தான் விஞ்ஞான ரீதியாக பார்ப்பதாகவும் புதிய வைரஸ் என்பதால் அது தொடர்பில் நிபுணர்கள் எடுக்கும் முடிவையே தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment