வீதியில் மரணம் என போலி செய்தி: ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 14 November 2020

வீதியில் மரணம் என போலி செய்தி: ஒருவர் கைது!

 


கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீதியில் மரணங்கள் நிகழ்வதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினம் 35 வயது நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கடுகன்னாவையைச் சேர்ந்த குறித்த நபர் வீதியில் இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளதாக வெளியிட்ட தகவல் பொய்யானது எனவும் தற்சமயம் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோர் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான பதிவுகளை பகிர்பவர்களையும் கைது செய்யப் போவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment