இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவல் வேகமாக இடம்பெற்றுள்ளதுடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இறப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் தற்சமயம் 5609 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும், இதுவரை சமூக மட்டத்திலான கொரோனா பரவல் அறியப்படவில்லையெனவும், ஏலவே உள்ள கொத்தனிகளில் தொடர்புபட்டவர்களே தொடர்ந்தும் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment