கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பதற்கு வைத்தியசாலைகளில் கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இறந்தவர்களுக்கான 'பெட்டியை' கொடுப்பது குடும்பத்தாரின் பொறுப்பு எனவும் அவர்களே அதை எங்கிருந்து பெறுவது என்று தீர்மானிக்க வேண்டும் எனவும், அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு மாற்று உதவிகள் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், தற்சமயம் எரிக்கப்பட்ட உடலங்களின் சாம்பலை வழங்குவதற்கும் விலை பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment