நுளம்பொன்றைக் கூட வாழ்க்கையில் கொலை செய்யாத தன்னை ஊடகங்கள் தெருச் சண்டியனாக்குவதாக கவலை வெளியிட்டுள்ளார் வன விலங்குகளுக்கான இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க.
பொலன்நறுவயில் தேசிய வனப் பூங்கா பிரதேசத்தில் இவ்வாரம் இடம்பெற்ற சம்பவங்களை ஹிரு போன்ற ஊடகங்கள் திரித்து வெளியிடுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றை தினம் அங்கு சிங்ஹலே தேரர்களும் அடாவடியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்களால் பாவிக்கப்பட்ட போக்குவரத்து பாதையை மீட்டெடுக்கவே தாம் அங்கு சென்றதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment