அக்குரணை - கண்டி பகுதிகளில் பிரயாணக் கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 November 2020

அக்குரணை - கண்டி பகுதிகளில் பிரயாணக் கட்டுப்பாடு

 


அக்குரணையஇரு கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலம்புகஹவத்தை மற்றும் குருகத்தென்ன பகுதிகளுக்கே இவ்வாறு பிரயாணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கண்டி - மஹியாவ பகுதிக்கும் இன்று பிரயாணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.


அட்டுலுகம பகுதியில் பதினைந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி நிலவி வருகிறது. இதேவேளை, கொழும்பு டிமெல் வத்த பகுதியிலும் பத்து பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment