20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகேவே கட்சியை விட்டு நீக்க முடிவெடுத்துள்ள சமகி ஜன பல வேகய, எதிர்க்கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகமிழைத்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர்கள் தமது முடிவை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
டயானா கமகே தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரை கட்சியை விட்டு நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமது முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை ஏலவே மனோ கணேசன் தமது கட்சி உறுப்பினரை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
உண்மையை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். பிரச்சினை எங்கே ஆரம்பிக்கின்றதென்றால உண்மையைப் பொய் என்றும் பொய்யை உண்மை என்றும் வாதிக்கும்போதுதான்.
Post a Comment