ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்குவதற்கு கட்சி மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாளைய தினம் இது தொடர்பில் கட்சி முடிவு அறிவிக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியல் ஊடாக நியமிப்பதில்லையெனும் கொள்கையை ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் 'கடுமையாக' கடைப்பிடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment