ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன் மற்றும் ஹலீம் அடிக்கடி சென்று வந்ததாக ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை, கல்வல வீதியில் அமைந்துள்ள வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் ஏலவே பிரதேசத்தில் கண்காணிக்கப்பட்டு வந்திருந்ததோடு அப்பகுதியில் இயங்கும் தௌஹீத் பள்ளிவாசலுக்குச் சென்று வருபவராத இருந்ததாகவும் பின்னர் இந்நபரும் மேலும் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபரின் வீட்டுக்கு இரு முன்னாள் அமைச்சர்களும் சென்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இது குறித்து ரிசாத் பதியுதீனின் பதிலை அறிவதற்கு அவரது சட்டத்தரணிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment