இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை எரிப்பதில் எதுவித பிரச்சினையுமில்லையென முஸ்லிம் பெண்கள் போன்ற வேடமிட்டவர்களைக் கொண்டு டான் பிரசாத் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சி செய்துள்ளமை தோல்வியடைந்துள்ளது.
கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களைக் கொண்டு அண்மையில் ஜனாஸா அடக்க விவகாரத்தை சிங்கள மொழியில் கடிதம் வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியிருந்த சி.டி.ஜே ராசிக்கை விமர்சிப்பதோடு நீதியமைச்சர் அலி சப்ரி இவ்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கும் வகையில் பிரியசாத் இந்நாடகத்தை அரங்கேற்ற முனைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதில் 'சம்பிரதாய' முஸ்லிம்கள் என இரண்டு பெண்களையும் ஒரு தொப்பியணிந்த ஆணையும் காட்சிப்படுத்தியிருந்த டான், சி.டி.ஜே ராசிக்கின் செயற்பாடு ஊடாக மீண்டும் தம்மை அரசியல் அரங்கில் முன் நிறுத்த முனைந்துள்ள அதேவேளை, குறித்த நபரின் சிங்கள கடிதத்தினைத் தொடர்ந்தும் ஞானசார, ஆனந்த தேரர் உட்பட பல்வேறு அமைப்புகள் வெளிக்கிளம்பியுள்ளதுடன் பௌத்த பிக்குகள் அலி சப்ரிக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமக்குப் பழக்கமுள்ள செய்தியாளர் ஒருவர் ஊடாக ஊடகங்களின் ஒலி வாங்கிகளைப் பொருத்தி, அப்பட்டமான நாடகம் ஒன்றை அரங்கேற்ற இந்நபர் முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
He's the Racist at the most. Pl send link of the pres meet.
Post a Comment