கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கனை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் 'நிபுணர்களின்' அறிக்கை கிடைக்காமல் தாம் எதுவித முடிவையும் எடுக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
தமகக்கு குறித்த நிபுணர்கள் பல்வேறு அறிக்கைகள் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவை கிடைத்த பின்னரே இது தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனவும் அமைச்சரவையினால் தனக்கு அவ்வாறே அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
எனினும், அமைச்சரவை அடக்கம் செய்ய அனுமதித்திருந்ததாக நேற்றைய தினம் சமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment