கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு தனிமைப்படுத்துமாறு மேயர் ரோசி முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் உள்ள சூழ்நிலையில் கொழும்பில் அவ்வாறு ஒரு லொக்டவுன் அவசியமில்லையெனவும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் கொழும்பில் 201 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment