விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செலவீனங்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெறுகின்ற நிலையில் அது தொடர்பிலான அமைச்சர் இன்று நாடாளுமன்றுக்கு வருவதைத் தவிர்த்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நாமல் ஏன் வரவில்லையென சபாநாயகரிடம் கேட்கப்பட்ட போது, அவர் அண்மையில் சுகயீனமாக இருந்ததாகவும் சுகமடைந்து விட்டாரா? என்று தெரியாது எனவும் சபாநாயகர் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் இருக்கும் போது அவர் முன்னிலையிலேயே அது பற்றி பேசப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment