நடைமுறை அரசு ஜனவரி மாதத்துக்குள் அமைச்சரவையை மாற்றும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிதாக இரு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுற்று நிருபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தொழிநுட்பத்துறைக்கான பிரத்யேக அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சுமே இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏலவே தமக்கு சுமை கூடிவிட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள அதேவேளை 20ம் திருத்தச் சட்டத்தின் அதிகார வரையறைக்கேற்ப நாட்டின் பாதுகாப்புத் துறை ஜனாதிபதியின் பொறுப்பிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கட்சி தாவிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தமக்கான அமைச்சுப் பதவிகளுக்காக தவம் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment