திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பின்னணியில், பசில் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
29.4 மில்லியன் ரூபா இவ்வாறு முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே பசிலுக்கு வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் வெளிநாடு சென்றிருந்த பசில் மீண்டும் நாடு திரும்பி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்த அதேவேளை பெரமுன கட்சியை ஒழுங்கமைத்து தேர்தல்களுக்கான தயார்படுத்தலிலும் ஈடுபட்டு வந்திருந்தார்.
தற்சமயம் 20ம் திருத்தச் சட்டம் ஊடாக அவரது நாடாளுமன்ற பிரவேசம் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment