கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்போரது உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நிலையில் அவற்றைக் கொண்டு செல்வதற்கான 'பெட்டி'யையும் உறவினர்களே தர வேண்டும் எனும் நிர்ப்பந்தமும் கொழும்பு வைத்தியசாலையில் விதிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் 58000 ரூபா வரை பொது மக்களிடம் அறவிடும் வழக்கம் அதிகரித்திருந்த நிலையில், உறவினர்கள் உடலங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தற்போது கொழும்பு வைத்தியசாலையில் ஆகக்குறைந்தது ஐந்து உடலங்கள் இவ்வாறு தேங்கியிருப்பதோடு அது தொடர்பில் முடிவொன்றைக் காண முடியாது வைத்தியசாலை நிர்வாகம் நிலை தடுமாறிப் போயுள்ளது. பெரும்பாலான குடும்பங்களால் இத்தொகையை செலுத்த முடியாத நிலையிலேயே இவ்வாறு கை விட்டுச் செல்வதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிக்கக் கொண்டு போகும் ஜனாஸாக்களுக்கு பெட்டியோ சாம்பலைப் பெற பணமோ தர முடியாது என முஸ்லிம்கள் நிராகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையில் இச்சூழ்நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment