இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் ஐந்து மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொழும்பு 2, கொழும்பு 12, கொழும்பு 14, கொழும்பு 15, வெல்லம்பிட்டி, ஆகிய இடங்களிலிருந்தே மூன்று பெண்கள், இரண்டு ஆண்களின் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளது.
தற்சமயம், ஏலவே மரணித்து பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட மரணங்கள் பிந்தியே பட்டியலில் இணைக்கப்படுவதுடன் எரியூட்டலுக்கான ஆயத்தங்கள் உடனடியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment