எதிர்வரும் ஜனவரிக்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் ஊடாக, தனித்துப் போயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபயமளிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வாதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி எந்த அமைச்சுப் பதவியையும் வைத்துக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சைத் தம் வசமாக்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், சரத் வீரசேகர உட்பட பலருக்கு அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமையும் தனக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுகளை நிராகரித்தவர்கள் ஏலவே காத்திருப்பதும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment