நிரூபித்தால் பதவி துறப்பேன்: அலி சப்ரி சவால்! - sonakar.com

Post Top Ad

Monday, 23 November 2020

நிரூபித்தால் பதவி துறப்பேன்: அலி சப்ரி சவால்!

 


அண்மையில் இரத்மலானையில் உயிரிழந்த பெண்ணொருவர் அடக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் தனது தலையீடு இருப்பதை நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகத் தயார் என தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில், அலி சப்ரியின் உறவினரான  பெண்ணொருவரின் உடலம் அவர் அமைச்சராக இருப்பதன் பயனால் புதைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


கடந்த செவ்வாயிரவு அடக்கம் செய்யப்பட்ட வயதான பெண், அலி சப்ரியின் 'சாச்சி' என பரவலாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment