இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிக்கும் வழக்கத்தில் மாற்றமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினர் உடலங்களை புதைப்பதை வலியுறுத்தி வருகின்ற போதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் எரிப்பதொன்றே தீர்வென தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நிபுணர்கள் குழு இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அண்மைய தினங்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
குறித்த நிபுணர்கள் குழு இதுவரை இறுதி அறிக்கையை வழங்காத நிலையில், இறுதி அறிக்கை வரும் வரை உடலங்கள் எரிக்கப்படும் நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த நிபுணர்கள் குழு நாட்டில் எப்பாகத்திலும் புதைப்பதற்கு இதுவரை இணக்கம் வெளியிடாதமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment