கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழக்கும் உடலங்களை எரித்தேயாக வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு பக்க பலமாக ஆய்வறிக்கை வெளியிட்டிருந்த பேராசிரியர் மெத்திகா விதானகே தனது நிலைப்பாட்டை மீளுறுதி செய்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் உள்நாட்டு நிலத்தன்மை நிலவரத்தை கருத்திற் கொள்ளாதது என அரசை இம்முடிவுக்கு இட்டுச் சென்ற நிபுணர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற அதேவேளை, நிலத்தடி நீரூடாக வைரஸ் பரவும் என்பதிலும் திடமாக உள்ளனர்.
சுகாதார, மருத்துவ நிபுணர்களின் முடிவிலேயே அரசின் நிலைப்பாடு தங்கியுள்ளதாக அமைச்சரவையும் விளக்கமளித்துள்ள நிலையில், வரண்ட நிலப்பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும், நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது என சி.டி.ஜே என்ற அமைப்பு சிங்களத்தில் கடிதம் வெளியிட்டதைத் தொடர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கிலும் இதே நிபுணர்களின் அறிக்கையிலேயே அரசு தங்கியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
1 comment:
Ctj யின் சிங்கள மொழி கடிதத்தை தமிழில் கொஞ்சம் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடுங்களேன் ..
Post a Comment