திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொட்டஹேன பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று திரும்பியிருந்த நிலையில் மருத்துவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் இதன் பின்னணியில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், 6134 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment