அடுத்த வாரத்திற்குள் 20ம் திருத்தச் சட்டத்தின் பயனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்வதோடு மீண்டும் பசில் ராஜபக்ச அமைச்சராவார் என பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைக் குடியுரிமையிருந்த காரணத்தினால் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாத போதிலும் பெரமுனவின் பிரதான அமைப்பாளராக தேர்தல் நடவடிக்கைகளை பசில் ராஜபக்சவே நெறிப்படுத்தியிருந்தார்.
20ம் திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆதரிக்க வைப்பதற்கும் பசில் ராஜபக்சவே பேரம் பேசலை முன்னெடுத்துள்ள அதேவேளை, அவருக்காக நாடாளுமன்ற ஆசனம் ஏலவே தயாராகவுள்ளமையும், உள் நுழைந்ததும் அமைச்சுப் பதவி காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் 12ம் திகதியளவில் பசில் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment