சமூகத்தில் நிலவும் பிரச்சினையொன்றை அரசின் கவனத்தைப் பெறுவதற்கான அமைச்சரவையில் பேசுவது ஒன்றும் பாவச் செயல் இல்லையென தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
ஜனாஸா எரிப்பு விவகாரத்தை மீண்டும் அவரே சர்ச்சையாக்குவதாக கடும்போக்குவாதிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் நிலையில் சிங்கள மொழி வானொலியொன்றுக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அலி சப்ரி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
முஸ்லிம்களிடமிருந்தே ஜனாஸா எரிப்பைத் தடுத்து நிறுத்துமாறு அதிகளவு வேண்டுகோள் வருகின்ற போதிலும் கத்தோலிக்க சமூகமும் அதனை வேண்டி நிற்பதாகவும் இவ்வாறு சமூக மட்டத்தில் நிலவும் பிரச்சினையொன்றை தான் அமைச்சரவையில் முன் வைத்துப் பேசியதொன்றும் பாவமான செயலில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
உடலங்களை அடக்க அனுமதிப்பதில் நிலத்தடி நீர் தான் பிரச்சினையென கூறப்படுவதனால் 70 அடி தோண்டினாலும் நீர் வராத இடங்கள் மன்னாரில் இருப்பதனால் அவற்றை பரிசீலிக்கக் கோருவது தவறில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளதுடன், உலக சுகாதார அமைப்பு - ஐ.நா , ஐரோப்பிய யூனியன் என பல முனைகளிலிருந்தும் இதற்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் தொடர்ந்தும் ஒவ்வொரு விடயமும் இனவாத கண் கொண்டு பார்க்கப்படுவது கவலைக்குரியது எனவும் அவர் மேலும் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 comments:
கல்லெறிகள் சொல்லெறிகள் எல்லாம் வரும்தான். அதற்காக சமூகத்தையும் தீனையும் விட்டுக் கொடுக்க முடியுமா? என்ன!
அஅது மட்டுமல்ல இந்த கொகொரோனா நோயாளிகளது மலசலகழிவுகள்,குளிக்க ககழுவ பாவிக்கும் நீர் ஆகியவற்றினால் தொற்று ஏற்படாதா? அவற்றை எரித்து அப்புபுறப்படுத்த வேண்டுமே என்றும் நெத் Fm வானொலிக்கு சாட்டையடிகொடுத்தார்.வாயடைத்துத்தான் போயினர்.பாராட்ட வேண்டிய விடயம்!
Post a Comment