பல நாடுகளில் இரண்டாவது கொரோனா அலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புற்றுள்ள நிலையில் இரண்டாவது தடுப்பூசி தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் பைசர் நிறுவனம் கொரோனா பாதிப்பினை 90 வீதம் தடுக்கவல்ல தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்த நிலையில் அமெரிக்காவின் மொடேர்னா நிறுவனம் 94.5 வீத பாதுகாப்பைத் தர வல்லதாக தமது தடுப்பூசி இருப்பதாக தெரிவிக்கிறது.
பைசர் நிறுவனத்துக்காக தடுப்பூசியைத் தயாரித்துள்ள பயோன்டெக் நிறுவன நிறைவேற்று அதிகாரி, பேராசிரியர் உகர் சஹின், கருத்து வெளியிடுகையில் அடுத்த வருட (ஐரோப்பிய) கோடை காலத்தில் தடுப்பூசிகளின் பயன்பாடு அதிகரித்து, 2021 டிசம்பர் அளவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரு நிறுவனங்களும் அவசரகால அடிப்படையில் மருத்துவ அனுமதிக்கு விண்ணப்பித்துள்ள அதேவேளை உலக நாடுகள் பெருமளவில் குறித்த நிறுவனங்களிடம் முன் பதிவுகளை செய்ய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment