நாட்டில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஊக்குவித்து, ஏற்றுமதி செய்வதன் ஊடாக நாட்டின் கடன் சுமையைக் குறைக்கலாம் என அறிவுரை வழங்கியுள்ளார் டயானா கமகே.
சமகி ஜனபல வேகய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயானாவின் கட்சியுறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சிப் பக்கம் இணைந்துள்ள டயானா, அரசாங்கம் 'பிழைத்து' விட்டதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை முறியடிக்க இது ஒரு மாற்றுவழியென தெரிவிக்கிறார்.
இரண்டு வருடங்களுக்குள் அரசு 5000 பில்லியன் ரூபா கடன் பெறும் நிலையில் உள்ளதால் கஞ்சா வளர்ப்பு குறித்து அவ்வப்போது ஆளுங்கட்சியினர் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment