எதிர்வரும் 15ம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத வகையில் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ள அதேவேளை அண்மைய தினங்களில் மேல் மாகாணத்திலேயே தொடர்ச்சியாக அதிகளவு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்சமயம், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment