மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில் கைதியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் ஆகக்குறைந்தது இருவர் காயமுற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சிறைச்சாலைகளில் ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றின் பின்னணியில் அங்கு பதற்றம் தோன்றியதாகவும் நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து விசேட அதிரடி படை அணிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
1 comment:
6dead.
Post a Comment