டயானா நீக்கம்; உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 16 November 2020

டயானா நீக்கம்; உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைப்பு

 


கட்சி முடிவை மீறி 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த டயானா கமகேவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ ரீதியாக கடித மூலம் அறிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.


20 ஐ ஆதரித்த சமகி ஜன பல வேகய உறுப்பினர் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு அக்கட்சியினர் வழங்கியிருந்த அதேவேளை ஏனைய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் அந்தந்த கட்சித் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகியோரின் பூரண சம்மதத்துடனேயே தாம் 20ஐ ஆதரித்ததாக மக்களை ஏமாற்றிய ஏழு உறுப்பினர்களும் தெரிவிக்கின்ற அதேவேளை ஒரு தலைவர் சிறையிலும் மற்ற தலைவர் விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

20ற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் டயானாவிற்கு எதிராக சஜித் மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் ரீதியில் சாலச் சிறந்தது.இவ்விடயத்தில் நயவஞ்சக துரோக அரசியலை முன்னெடுக்கும் ரவூப் மற்றும் றிஸாட் அணியை சேர்ந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவேண்டும்.தாமதித்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்த நிலையே ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஏற்படும் என்பதை சஜித் புரிந்து கொள்ளவேண்டும்.

Post a Comment