ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரான் குழு தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதானி நாலக சில்வாவை சிறைப்படுத்தியதன் பின்னணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கேள்வியெழுப்பியுள்ளனர் ஜனாதிபதி ஆணைக்குழுவினர்.
மைத்ரி கொலை முயற்சியின் பின்னணியில் அவர் இருப்பதாக பொலிஸ் உளவாளி நாமல் குமார வழங்கிய தகவலின் பின்னணியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட DIG நாலக சில்வா சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரிக்கப்பட்ட போது, பொலிஸ் திணைக்களத்துக்குள் இடம்பெற்ற சூழ்ச்சி பற்றி தமக்கு அதிகம் தெரியாது என மைத்ரி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment