மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கை எதிர்வரும் திங்கள் நீக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நிமித்தமே 10 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதாகவும் குறித்த 10 தினங்களுக்குள் முடியுமான வரையான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், நாடு வழமை நிலைமைக்கு வருவதும் அவசியமானதொன்று என்ற அடிப்படையில் திங்களன்று பெரும்பாலும் ஊரடங்கு நீக்கப்படும் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment