கடலில் குதிப்பதற்கு பவித்ரா நிபந்தனை! - sonakar.com

Post Top Ad

Sunday, 8 November 2020

கடலில் குதிப்பதற்கு பவித்ரா நிபந்தனை!

 


நாட்டை  கொரோனாவிலிருந்து காப்பாற்றத் தாம் கடலில் குதிக்கவும் தயார் என அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் அதைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்றன.


இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள பவித்ரா, நாட்டிலிருந்து கொரோனா நீங்குவதற்கான 'உத்தரவாதம்' இருந்தால் மாத்திரமே தான் கடலில் குதிப்பதாக தெரிவித்ததாகவும், தான் பலியாவதால் கொரோனா நீங்கப் போவதில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.


சுகாதார அமைச்சர் பவித்ரா, கொரோனா பரவலைத் தடுக்க விசேட வழிபாட்டில் ஈடுபட்டு, பூஜைப் பண்டங்களை ஆற்றில் வீசியெறிந்ததன் பின்னணியில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கையிலேயே கொரோனா பரவலைத் தடுக்க கடலில் குதித்துத் தன்னைப் பலியிடவும் தயார் என தெரிவித்திருந்தார்.

1 comment:

True never die said...

This kind of talk only comes corrupted politician who try to keep people's support and satisfying the people getting sympathy, there are many to speak,. Everyone can get people's support in this way, uneducated are flowing parliament ,

Post a Comment