பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சுப் பதவியொன்றைப் பொறுப்பதை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்றதற்கு பசிலே காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்ட போதிலும், கோட்டாபே ராஜபக்சவின் வெற்றி மற்றும் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் பசில் ராஜபக்சவின் வியூகங்களே அடித்தளம் என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
பசிலுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கவும் ஆள் தயாராக இருப்பதாக பெரமுன தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment