கொரோனா சூழ்நிலையில் இலங்கைக்குள் வருவதற்கும் இங்கிருந்து வெளியேறுவதற்கும் ஏற்பாடு செய்து தருவதாக பலரிடம் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சு அவ்வாற எந்த தனி நபருக்குமோ தனியார் முகவருக்குமோ எவ்வித பிரத்யேக ஏற்பாடும் இல்லையென அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ளோர் அந்தந்த நாட்டில் உள்ள தூதரகங்களில் தேவையான உதவிகளைப் பெற முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலில் முடங்கியுள்ள இலங்கையரை அழைத்து வரும் நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment